Plantix Partner: join the biggest online faring community in India

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வேளாண் சமூகத்தில் இணைத்து உங்கள் வணிகத்தை டிஜிட்டல் முறையில் விரிவுபடுத்திடுங்கள்.



இலவசமான ஆன்லைன் கடையைப் பெற்றிடுங்கள்
Transform your agri-business digitally with the Plantix Partner app

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகான் பற்றி மேலும் அறிக

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகானின் முக்கிய நன்மைகள் என்ன?

  • விவசாயிகளின் கூடுதல் ஆர்டர்களைப் பெற இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விவசாய சமூகத்தில் இணைந்திடுங்கள்.
  • உங்கள் தொழிலை ஆன்லைனில் நிறுவி, தொழில்முறையிலான ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சிறந்த சேவையினை வழங்கிப் போட்டியாளர்களை முந்திச் செல்லுங்கள்.
  • தயாரிப்பு பற்றிய விரிவான தகவல்களைப் பெற்று உங்கள் சமூகத்தில் உள்ள விவசாயிகளுக்குச் சிறந்த சேவையை வழங்கிடுங்கள்.
  • சிறந்த விலைகள் மற்றும் புதிய தயாரிப்புகளைக் காட்டுவதன் மூலம் உங்கள் விவசாயிகளின் ஆர்டர்களை அதிகரித்திடுங்கள்.
  • நீங்கள் செய்யும் ஆர்டர் ஒவ்வொன்றுக்கும் லாயல்டி புள்ளிகளை வென்றிடுங்கள். நீங்கள் அடுத்த முறை வாங்கும்போது அதிக தள்ளுபடியினை பெற பிளான்டிக்ஸ் பார்ட்னர் செயலி மூலம் உங்கள் புள்ளிகளை மீட்டுக் கொள்ளலாம்.

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகான் என்றால் என்ன?

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகான் என்பது சுயாதீன சில்லறை விற்பனையாளர்களுக்கு முழு சேவையினை வழங்கும் ஆன்லைன் கடையாகும், இது விவசாயிகளுக்குத் தங்கள் சரக்குகளைக் காட்சிப்படுத்த உதவுகிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பிரிவுகளுடன் உங்கள் கடையை அமைப்பது எளிது. பிளான்டிக்ஸ் 1,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் பட்டியலை வழங்குகிறது, எனவே சில்லறை விற்பனையாளர்கள் அவர்கள் வழங்கும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகான் ஏன் இலவசமானது?

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகான் இலவசமானது, ஏனெனில் வேளாண் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவ நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். பிரத்யேகமான தீர்வுகள், நம்பகத்தன்மைமிக்க தயாரிப்புகள் மற்றும் நம்பகமான சேவைகள் மூலம் ஒரு டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில், சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் சுதந்திரமான சில்லறை விற்பனையாளர்களை இணைப்பதே எங்கள் நோக்கம்.

பிளான்டிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு என்றால் என்ன?

பிளான்டிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு என்பது இந்திய விவசாயத்தின் பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்ட சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் சுதந்திரமான வேளாண் சில்லறை விற்பனையாளர்களின் வலையமைப்பாகும். விவசாயத்தில் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்கவும், வலுவான சமூகத்தை உருவாக்கிடவும், வேளாண் சில்லறை விற்பனையாளர்களை நேரடியாக விவசாயிகளுடன் டிஜிட்டல் முறையில் இணைத்திடவும் நாங்கள் விரும்புகிறோம்.

கூடுதல் பார்ட்னர் டுகான்களை உருவாக்குவது எங்கள் டிஜிட்டல் பிளான்டிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும், இதில்:

  • சிறிய அளவில் பயிர் செய்யும் விவசாயிகள் தங்கள் பயிர் பிரச்சினைகளிலிருந்து விடுபடவும், விளைச்சலை அதிகரிக்கவும் சில்லறை விற்பனையாளர்களின் தொழில்முறை சேவையின் அடிப்படையில் சிறந்த நம்பகமான தயாரிப்புகளை நியாயமான விலையில் பெறுகிறார்கள்.
  • சுயாதீனமாகச் செயல்படும் வேளாண் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விவசாயிகளுக்குச் சிறந்த நிபுணர் ஆலோசனையையும் சேவையையும் வழங்குவதன் மூலம் தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்கான ஆதரவைப் பெறுகின்றனர்.
  • நிலையான விவசாயத்திற்குத் தேவையான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பிளான்டிக்ஸ் உந்து சக்தியாகத் திகழுகிறது, மேலும் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே எங்கள் பிளான்டிக்ஸ் பார்ட்னர் செயலி மூலம் நடக்கும் மொத்த விற்பனையிலிருந்து மட்டுமே பிளான்டிக்ஸ் லாபத்தை ஈட்டுகிறது.

ஆன்லைன் கடையை உருவாக்க எனக்கு ஏதேனும் உரிமம் அல்லது அனுமதி தேவையா?

சில்லறை விற்பனையாளர் உரிமம் மற்றும் தயாரிப்புகளின் கொள்கை சான்றிதழ்கள் தேவை. உங்கள் சரக்குகளில் சட்டப்பூர்வமாகச் சரியான தயாரிப்புகளை அனுப்புவது உங்களுடைய பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளவும்.

லாயல்டி புள்ளிகள் என்றால் என்ன, அவற்றுக்கு நான் எப்படி ஈடாக்கம் பெறலாம்?

உங்கள் பார்ட்னர் டுகானில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளான்டிக்ஸ் லாயல்டி புள்ளிகளைப் பெறுவீர்கள். உதாரணமாக: நீங்கள் ரூ.5,00,000 மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றால், அதற்குச் சமமான லாயல்டி புள்ளிகளைப் பெறுவீர்கள். இதன் பொருள் நீங்கள் 5,00,000 பிளான்டிக்ஸ் லாயல்டி புள்ளிகளைப் பெறுவீர்கள் என்பதாகும்.

லாயல்டி புள்ளிகளின் மதிப்பு என்ன?

உங்களின் லாயல்டி புள்ளிகளுக்குச் சமமான தொகையின் 1% பில்லில் உங்களுக்குத் தள்ளுபடியாகக் கிடைக்கும். உங்களின் லாயல்டி புள்ளிகள் உங்களின் பில் மதிப்பை விட அதிகமாக இருந்தால், பில்லிற்கு சமமான லாயல்டி புள்ளிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ளவை புள்ளிகளாக இருக்கும், அவற்றை நீங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் நேர்மை புள்ளிகள் அனைத்தையும் பிளான்டிக்ஸ் பார்ட்னர் செயலி இணையதளத்தில் மீட்டெடுக்கலாம்.

வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதை நான் எப்படி உறுதிப்படுத்துவது?

உங்கள் பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகானை உருவாக்குவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கிருந்தும் எந்த நேரத்திலும் சேவை செய்ய முடியும் என்பதால், வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளரைப் பெருக்குவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும். பிளான்டிக்ஸில் நாம் ஒன்றாக வளர விரும்புகிறோம். வேளாண் சில்லறை விற்பனையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் பகுதியில் நிலவும் வேளாண் தரவுகளின் அடிப்படையில் விவசாயம் தொடர்பான நிபுணர் ஆலோசனைகளை வழங்குவோம்.

இது விவசாயிகளுக்கு உதவியாக இருந்து, அவர்கள் அதிகம் செலவழிப்பதிலிருந்து அவர்களைத் தடுத்து, அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கும் சரியான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குகிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான விவசாயத்தை உருவாக்குவதற்கு நம்பிக்கை மற்றும் அறிவு பகிர்வு நிறைந்த சுழற்சி அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

எனது தரவு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?

பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகான் வலைத்தளம் SHA-256 / RSA குறியாக்கத்துடன் SSL சான்றிதழைக் கொண்டுள்ளது, இது அனைத்து தரவு மற்றும் பாதுகாப்பான உள்நுழைவுக்கு பாதுகாப்பான குறியாக்கத்தை வழங்குகிறது.

எனது இலவசமான ஆன்லைன் கடையை அமைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

"இலவச ஆன்லைன் கடையைப் பெறுக" என்கிற பட்டனைக் கிளிக் செய்து, உங்கள் விவரங்களை நிரப்பவும், அப்போதுதான் தாங்களுடைய ஆன்லைன் டுகானை நாங்கள் அமைக்கத் தொடங்குவோம்.

கடை ஒன்றை அமைப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

24 மணி நேரத்திற்குள் தயார் நிலையில் இருக்கும் உங்கள் ஆன்லைன் கடைக்கான இணைப்பைப் பெறுவீர்கள்.

தொழில்நுட்ப உதவிக்கு நான் எவ்வாறு அணுகுவது?

வாடிக்கையாளர் சேவை முகவர் (CCA) 24 மணி நேரத்திற்குள் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து உங்களுக்கு உதவுவார். உங்களது ஆன்லைன் கடையை அமைப்பது தொடர்பான ஆதரவை வழங்க உங்களுக்கென நியமிக்கப்பட்ட CCA உங்களை அழைப்பார். உங்கள் வசதிக்கேற்ப அவர் உங்களை எப்போது அழைக்க வேண்டுமென்பதையும் நீங்கள் திட்டமிடலாம். எங்கள் குழுவில் உள்ளவர்கள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளைப் பேசுவார்கள். உங்கள் மொழியிலேயே உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் CCA இடம் தெரிவிக்கவும். உங்கள் பார்ட்னர் டுகானை அமைப்பதற்கு உதவ அவர்கள் தயாராக உள்ளனர், எனவே நீங்கள் உடனடியாக விற்பனையைத் தொடங்கலாம்.

எனது பிளான்டிக்ஸ் பார்ட்னர் டுகானை எப்படி ரத்து செய்வது?

மேலே பட்டியலிடப்பட்டுள்ள எண்களில் எங்களை அழைக்கவும் அல்லது partner-dukaan@plantix.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும், தாங்களுடைய கணக்கை நாங்கள் உடனடியாக ரத்து செய்வோம்.

பார்ட்னர் டுகான் ஆன்லைன் வணிகத்தைத் தென்றலாக மாற்றுகிறது.